வெளிநாடு செல்வதற்கென கொழும்பில் தங்கியிருந்த முன்னாள் போராளியொருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முன்னாள் போராளி மிக அண்மையிலேயே புனர்வாழ்வு நிலையமொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த குறித்த முன்னாள் போராளியான 24 வயதுடைய சிவசம்பு பிரசாத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த சனிக்கிழமை அரேபிய நாடொன்றிற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு அவர் சென்றிருந்ததாக சகோதரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மிக அண்மைக்காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.