யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாளில் தீபம் ஏற்றி மாவீரர்களை வணங்கும் வேளையில் உட்புகுந்த சிங்கள பயங்கரவாத இராணுவத்தினர் அடாவடித்தனமா மாணவர்களை தாக்கியும் நடைபெற்ற நிகழ்வை நிறுத்தி தீபம் ஏற்ற வைக்கப்பட்டடிருந்த பொருட்களை கால்களால் மிதித்து அவமதித்ததோடு மாணவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இச்செயலைக் கண்டித்து யாழ் மாணவர்கள் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள். மிக அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை பெரும் படைகொண்டு சிங்கள பயங்கரவாத அரசு அடக்கியது. பல மாணவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள், அதன் பின்பு தேடித் தேடி பல மாணவர்களை எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்திருந்தனர்.
சிங்கள பயங்கரவாத அரசின் கடும் போக்கை கண்டித்தும் கைது செய்த மாணவர்களை விடுவிக்கக் கேரரியும் பல நாடுகளில் இன்று இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது.பிரித்தானியாவின் லண்டனிலும் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பெருமெடுப்பில் இளையோர் கலந்து தமது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்கள். சிங்கள கொடி தமிழர்களின் கொடி இல்லை என அக்கொடி கிழித்தெரியப்பட்டது.