இலங்கையில் போர் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தினர்.
அது அங்கு சுமுகமான நிலை இல்லை என்பதற்கான பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசுக்கும், அரச படைகளுக்கும் எதிராக உள்ளூர் அரசியல்வாதிகளும், மக்களும் இணைந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இது 2009ம் ஆண்டிற்குப் பின்னர் ,அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய போராட்டம் இது.
மாவீரர் தினத்தை நினைவு கூறும் திட்டத்தை தடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து குழப்பியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
பொலிசாரும் இராணுவத்தினரும் மாணவர்களைத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறும் குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது என்றும் AFP தெரிவித்துள்ளது.