யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்தும், சிறிலங்கா அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களையும், தடுப்பில் இருந்து விடுதலையாகி மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் லண்டனில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்னாள் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
அவசரமாக காலத்தின் தேவை உணர்ந்து www.tamilsolidarity.org தமிழ் தோழமை இயக்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களையும், இளையோர் சமுகத்தையும் கலந்துகொண்டு உங்கள் உறவுகளின் விடுதலைக்கு குரல்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு 020 7262 1841 அழைப்பை ஏற்படுத்தி எமது மற்றும் பல்லின மக்களின் ஊடாக ஸ்ரீலங்கா அரசின் அடக்கு முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டு தடுப்பில் இருக்கும் மாணவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்துவோம்.
முகவரி: இலங்கை உயர் ஆணையம், 13 ஹைட் பார்க் பூங்கா, லண்டன் W2 2LU
காலம்: இன்று வெள்ளி 7 டிசம்பர் 2012 மாலை 4, மணிமுதல்
உங்கள் கண்டன எதிர்ப்பையும், கைது செய்யப்பட்ட உறவுகளின் விடுதலையையும் வலியுறுத்த இந்த இலக்கத்தின் ஊடாக அழையுங்கள்: 020 7262 1841 ( தமிழர்கள் மற்றும் மாற்று மொழி பேசும் மக்களின் ஊடாக கண்டனங்களையும் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையையும் வலியுறுத்தி உங்களது உடன் பதிவு செய்யுங்கள்)