பெரும்பனான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசரே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை என்று கூறும் போது, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அழைக்கும் அந்த தெரிவுக்குழுவிலும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா? என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்புகின்றார்.
கடந்த 4ம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட யாழ் மாணவர்களை விடுவிப்பதற்கான அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இலங்கையில் இரு நாடு, இரு இனம், இரு சட்டம் என்பன நடைமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இரு நாடு, இரு இனம், இரு சட்டம் என்பன நடைமுறையில் இருக்கின்றன.
இந்த நாட்டு மக்கள் இரு வேறு நாட்டு மக்களாகப்பார்க்கப்படுகுpன்றனர். வடக்கு கிழக்கு மக்கள் ஒரு நாட்டு மக்களாகவும், தெற்கு மக்கள் இன்னொரு நாட்டு மக்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.
வடக்கு மக்களுக்கு ஒரு சட்டமும், தெற்கில் வேறொருமாதிரியான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டு மக்கள் ஒரே தேச மக்கள் என்ற நிலைப்பாட்டை 2012 ம் இன்று வரையில் அரசு ஏற்படுத்தவிரல்லை.
அதுமாத்திரமன்றி நீதித்துறையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒரு நிலைமையில்தான் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண கூட்டமைப்பினை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு அழைக்கின்றது.
இந்நிலையில் பிரதம நீதியரசருக்கே நம்பிக்கையில்லாத இந்த தெரிவுக்குழுவில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதன்மூலம் ஒரு நாளும் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.