வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் 19ம்நாள் தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றில் புலிக்கொடி ஏற்றியவர் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக, சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுடன், கைதுசெய்யப்பட்ட இந்தக் குழுவினர் தொடர்புகளை வைத்திருந்துள்ளனர்.
யாழ்ப்பாண இளைஞர்களை கவர்வதற்காகவே, விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் பரப்புரைகளை மேற்கொண்டனர்.
வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை ஏற்றியவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி.
அவர் 2009இல் போரின் முடிவில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்.”என்று அவர் மேலும் தெரிவித்தார்.