பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 09.12.2012அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் வல்வை விளையட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக வல்வை அணி சார்பில் பார்த்திபன் 18 ஓட்டங்களையும், ரஞ்சித் 15 ஓட்டங்களையும் எடுத்தனர்.
80 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் புகுந்த பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகம் 8 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது. பொலிகை அணி சார்பில் அதிகபட்சமாக முல்லைதிவ்யன் 47 ஓட்டங்களை எடுத்து கொடுத்தார்.