பழையமாணவர்களே..! நலன்விரும்பிகளே..! ஆதரவாளர்களே..! பெற்றோர்களே வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலை யாழ்மாவட்டத்தில் முதற்தரம் என அனைவராலும் போற்றப்படுகின்ற வகையில் மிகச்சிறப்பாக இயங்கிவருவதை தாங்கள் அறிவீர்கள். வல்வையின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த 100 பாலர்களை தன்னகத்தே கொண்டு தற்போது இயங்கி வருகின்றது.
தற்போதுள்ள கட்டடத்தில் (20 x 40 அடிகள்) இடவசதியீனம் காரணமாக கட்டடத்தின் உள்ளேயும், வெளியே விளையாட்டு முற்றத்திலுமாக பாலர்களின் வகுப்புக்கள் நடாத்தப்படுவதோடு, நவீனகற்றல் முறைகளினை நடமுறைப்படுத்துவதற்கும் இடவசதியீனம் ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஏறுமுகத்தில் செல்கின்ற பாலர் பாடசாலையின் தனித்துவத்தை மேம்படுத்தி சிறந்த சேவையினை வல்வையின் பாலர்களுக்கு வழங்குதலின் பொருட்டு நவீனகற்றல் முறைகளிற்கேற்ற வகையில் 80 x 35 அடிகள் நீள அகலத்தில் ( கணினி அறை மற்றும் அலுவலகம் உள்ளடங்கலாக) பாலர் பாடசாலையினையும், அதற்குமேல் கலையரங்கத்தினையும் உள்ளடக்கி ஒரு இருமாடிக்கட்டடத்தினை நிர்மானிப்பதற்கு முடிவுசெய்துள்ளோம்.
இதற்கு முதற்கட்டமாக நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் 4 பரப்புக்காணி பாலர் பாடசாலைக்கென சொந்தமாகக் கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான சுற்றுமதிலும் நெடியகாடு அபிவிருத்திச்சபையின் நிதிப்பங்களிப்புடன் வைத்து முடிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே தொடர்ந்து கட்டட வேலைகளையும், அதனுடன்கூடிய பாலர் பூங்கா வடிவமைப்பு வேலைகளையும் முன்னெடுப்பதற்காக பழையமாணவா;கள், நலன்விரும்பிகள், ஆதரவாளா;கள், பெற்றோர்கள் அனைவரிடமிருந்தும் பெரும் நிதிப்பங்களிப்பினை தயவாக வேண்டிநிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
திரு.பூ.அகமணிதேவர்; (0771028837) தலைவர், கணபதிபடிப்பகம்.
திரு.சி.மதுசூதனன்; (0779037107) செயலாளர், கணபதிபடிப்பகம்.
மின்னஞ்சல் : kanapathyreadingroom@gmail.com
வங்கிக் கணக்கு இலக்கம் : 70601947 ( கணபதிபடிப்பகம், இலங்கைவங்கி, வல்வெட்டித்துறை Kanapathy Padippakam, Bank Of Ceylon, Valvettiturai, BankCode:7010, IFSC Code:- BCEYLKLX)
கணபதி படிப்பக நிர்வாகத்தினரின் வேண்டுகோள்
கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணி (நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயவீதியின் வடமேற்கு மூலையில் பிரதான வீதியோரமாக அமைந்துள்ளது)