ராணுவத்திற்கென வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் 10 முதல் 15 வரையிலான பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டதாக கூறி சுய விருப்பத்தின் பேரில் சில பெண்கள் அண்மையில் இராணுவத்தை விட்டு வெளியேறி இருந்தனர். ஏனையவர்களை பெற்றோர் பார்வையிட படையினர் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பெற்றோருக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு தொகுதி பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் படையினர் அனுமதித்து உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home செய்திகள் இராணுவத்திற்கு வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி

இராணுவத்திற்கு வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
Dec 12, 20120
Previous Postநேற்றைய தினம்(11.12.2012), பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
Next Postமரண அறிவித்தல்-சத்தியமூா்த்தி - பாலகோபி