2015 ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட விளையாட்டுக்கழகங்களுகிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று 10 ஆம் திகதி நெற்கொழு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் 100 அணிகள் பங்குகொள்கின்றன.
யாழ்ப்பாணத்தில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான போட்டிகள் மூன்றாவது முறையாக நடத்தப்படுகின்றன. இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் எதிர் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகம் மோதியது.
3 – 2 என்ற கோல்கணக்கில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது