யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்றைய தினம் கடுங்குளிருக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தில், பல நூற்றுக்கணக்யன மக்களும் இளையோர்களும் கலந்துகொண்டனர். இதேபோல இன்றை தினமும் நாளைய தினமும் பெருவாரியான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.