யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:-

யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார். வலிகாமம் பகுதி விளையாட்டுத்துறை அதிகாரியொருவரது மகளான 21 வயதுடைய நடராசா கியானி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடை பகுதியினிலுள்ள அவரது வீட்டிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மரணித்தவர் படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியிருந்த வேளை அம்மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையினில் சடலமாக கிடந்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான இவர் தற்போதைய பகிஸ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகத்திறகு சென்றிருக்கவில்லை. வீட்டிலேயே தங்கியிருந்ததாக பெற்றோர் மேலும் தெரிவிக்கின்றனர். தற்போதைய பல்கலைக்கழக சூழலில் மாணவியினது மரணம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.