நேற்று பிரித்தானிய பிரதமரின் வீட்டிற்கு முன் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டனில் நேற்று வெள்ளிக்கிழமை மிகவும் எழுச்சிகரமாக 10, டவுணிங் ஸ் ரீட்டில் (10 Downing Street) உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர், சமூக ஆவலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தொடர்ந்துவரும் அரச பயங்கரவாதத்தினை உலகறியச் செய்வதற்கு காலநிலையையும் பொருட்படுத்தாது நேற்று மாலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்குபற்றியிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published.