யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி தமிழர் தாயகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாடம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் யாராவது ஒருசிலர் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்படவேண்டும், இது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம், இது தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான இராணுவம் இல்ல, இது இங்கிருக்கின்ற ஜனநாயகத்தை சீரழித்து தமிழ் மக்களை அழிக்கின்றது, மக்களை அடிமைகளாக்குகின்றது, வலோற்காரமாக இராணுவத்திற்கு ஆட்களைப் பிடிக்கும் வரையில் இவைகளுடைய செயற்பாடு இருக்கின்றது.
ஆகவே இவ்வாறான ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் எமது மண்ணில் இருக்கக் கூடாது என்பது தான் எமது ஒட்டுமொத்த கருத்தாக இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி இன்று காலை வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் ஒன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

10 இலட்சம் தமிழ் மக்கள் இருக்கக் கூடிய இந்த பகுதியில் ஒன்னரை இலட்சம் இராணுவம் இதனைவிட பொலிஸ், விமானப்படை, கடற்படை என்று ஏராளமானவர்கள் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய முக்கிய நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. அதனூடாக தமிழ் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ வேண்டும் என்பதாகும்.
இதன் ஒரு கட்டம்தான் விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர், பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர், தமிழ் மக்களுடைய காணிகள் சிறிலங்கா இராணுவத்தினால் அடாத்தாக பிடிக்கப்படுகின்றது, பௌத்த மக்கள் இல்லாத இ,டங்களில் புத்த கோவில்கள் வருகின்றன. இவை அனைத்தும் தமிழ் மக்களை இல்லாது ஒழிக்க குடும்ப ஆட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளே.
தமிழ் மக்களுக்கான தீர்வினை அரசின் காலடியில் பொய் விழுந்து கேட்க முடியாது. தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு எட்டும் வரை நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். இது வெறும் வீர வாசனம் இல்ல எமக்கு மேல் பொறிக்கப்பட்டுள்ள கடமை என்றும் அவர் மேலம் தெரிவித்தார்.