கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ள மக்களுக்குரிய அடிப்படை வசதிகள் இதுவரை முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக இங்குள்ள தபாலகத்தையாவது சீராக இயங்க வைப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் கஷ்ரப்பட்ட பிரதேசமான அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படை விசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மீள்க்குடிமர்வின் போது பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் மேலும் வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில் பெரும் பிரச்சனைகளை அம் மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக தமது உறவுகளுடன் தொடர்பைக் கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாததுடன் நடக்கின்ற விடயங்களையும் அறிந்து கொள்ள முடியாமல் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் முதற்கட்டமாக இங்குள்ள தற்காலிகமாக இயங்குகின்ற தபாலகத்தை நிரந்தரக் கட்டடத்தில் சீராக இயங்க வைக்க வேண்டும்.
இதற்கான காணி ஒதுக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இங்கு வருகின்ற அரசியல்வாதிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த மக்களது பிரச்சனைகளையும் நிலைமையையும் கருத்திற் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அரசஅதிபரிம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.