யா வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்பு விழாவும் ஒளிவிழாவும் 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்றது இங்கு பிரதம விருந்தினராக முறைசாராக்கல்வி செய்திட்ட அலுவலர் வலயக்கல்வி அலுவலகம் வடமராட்சி திரு.சண்முகம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக அதிபர் யா உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலை திரு.பூ.சக்திவேல் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார் மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளை தொடர்ந்து அதிபர் ஆற்றிய உரையில் வல்வை மக்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களுக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார் மேலும் மேலும் எமது பாடசாலையோடு இணைந்திருந்து எமது பாடசாலையின் பௌதிகவளங்களை மீள் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தேவைகளையும் எடுத்துக்கூறினார் அதில் சுற்றுப்புற சுவர் உயர்த்தி கட்டப்பட வேண்டும் மற்றும் கட்டடத்தின் சுற்றுப்புறம் நெற்றினால் அடைக்கப்படவேண்டிய தேவைகளையும் எடுத்துக்கூறி எமது பாடசாலையின் நலன் கருதி யாரெனும் முன்வந்து இக்குறைகளை நிவர்த்தி செய்யமுன்வந்தருளவேண்டும் என வரவேற்றிருந்தார். மற்றும் புதிய மாணவர்களின் வருகையையும் வலுப்பெறச்செய்யவேண்டும் எனவும் கேட்டிருந்தார் இவை அணைத்தையும் வல்வை மக்கள் நிச்சையம் செய்து தருவார்கள் எனக்கூறி விடைபெற்றார்