உலகெங்கினும் வாழும் நல்லோர் உதவியுடன் வல்வையர் பெருமைப்படும் விதத்தில் ஒரு சிறப்பான விஞ்ஞான ஆய்வுகூடத்தினை எம் தமிழ் சிறுவருக்காக அமைத்துக் கொடுத்துள்ளது.
இது யாழில் ஒரு சிறந்த விஞ்ஞான கூடமாக திகழ்கிறதென பேசப்படுகிறது.
இதற்காக அன்புடன் உழைத்து, பண உதவி புரிந்து, ஆதரவு தந்த எல்லா உள்ளங்களுக்கும் நன்றிகளையும் நத்தார் புது வருட வாழ்த்துக்களையும் பேரன்பினையும் CWN மீண்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகி றது.
அத்துடன் CWN எம் சிறுவரின் எதிர்கால வளமான வாழ்க்கைக்கு தேவையான விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் முகமாக எதிர்வரும் 21ம் திகதி மாணவர் தாமே தமக்கு தேவையான பாடங்களை, எதிர்கால விஞ்ஞான தொலை நோக்கு சிந்தனையுடன் தெளிவுடன் தெரிவு செய்து தங்கள் வருங்காலத்தை தம் கையில் சேர்க்க வழி காட்டல் நிகழ் வொன்றினையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கு கொண்டு மாணவரிற்கு விஞ்ஞான கல்வியின் தேவையை எடுத்துரைக்க உள்ளனர்.