தில்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு தனி சட்டம் வேண்டும் என்று வாதாடினார், இதை ஏற்றுகொண்ட தில்லி கீழமை நீதிமன்றம் அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் அவசியம் எனவும் அகதிகளாக வரும் நபர்களை கட்டாயபடுத்தி திரும்ப அனுப்ப கூடாது எனவும இது சம்பந்தமாக மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என தீர்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியா உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த மத்திய அரசு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஒரு நல்ல தீர்ப்பிற்கு தடையாணை பெற்றது. இந்த வழக்கு விசாரனைக்கு அடுத்த மாதம் வர உள்ளது. இந்த வழக்கில் வெற்றிபெற தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.
சங்கர்
செயலாளர்
தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம்
தில்லி.
+91 9213170063
+91 9873251588