Search

நாட்டில் ஜனநாயகம் பாசிசத்தை அன்மித்து விட்டது :-சிறீரதன் MP

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீரதன்

“அரசாங்கம் தமிழர் தாயகத்தில் சமகாலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை எனவும் தமிழ் மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் படிப்படியாக பறித்துவரும் அரசு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைதினூடாக எஞ்சியுள்ள பெறுமதிமிக்க மூலதனமாக கல்வியையும் முடக்க முனைகின்றது” எனவும் தெரிவித்தார்.


இதேவேளை பல்வேறு அரசசார்பு கைக்கூலிகளின் தடங்கல்களை தாண்டியும் வெற்றிகரமாக திறந்துவைக்கப்பட்ட இந்த இணைய நூலகமானது பளை மற்றும் பளையை அண்டிய பிரதேசங்களில் திறக்கப்படும் முதல் இணைய நூலகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு எந்தளவிற்கு அக்கறை காட்டி வருகின்றது போன்ற விபரங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அனைவருக்கும் தெரியவரும் என மாவை.சேனாதிராஜா எம்.பி தெரிவித்துள்ளார்.

மக்கள், மாணவர்கள் ஆகியோர் இன்றைய தொழில்நுட்ப உலகினூடாக அதிஉச்ச பயனை பெறும் பொருட்டு பளை, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் 4 லட்சம் ரூபா பெறுமதியான இணைய வசதியுடன் கூடிய கணினிக்கூடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியினை லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலய நிறுவுனர் கோபால கிருஷ்ணன் அவர்கள் வழங்கியிருந்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தலைவர் அன்ரன் பர்ணார்ந்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

அனுசரணையாளரான கற்பகவிநாயகர் ஆலய நிர்வாகி கோபாலகிருஸ்ணன் கலந்துகொண்டதுடன், பங்குதந்தை பத்திநாதர் அடிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரும் மற்றும் முன்னாள் மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அரியரத்தினம், அதிபர் ஜீவரட்ணம், ஆசிரியர் வதனகுமார், நூலகர் உமாதேவி, உதவி நூலகர் அரவிந்தன், பளை கட்சி அமைப்பாளர் சுரேன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

“சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்குடன் இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான உண்மைத்தன்மைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு எந்தளவிற்கு அக்கறை காட்டிவருகின்றது போன்ற விபரங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அனைவருக்கும் தெரியவரும் எனவும், அரசுடன் இணைந்து எமது அதிகாரங்களை தட்டிப் பறிக்கின்றவர்களிடம் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது” எனவும தெரிவித்தார்.






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *