வல்வெட்டித்துறை தேவாலாயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு பங்குதந்தை அவர்களால் திருப்பலி நடாத்தப்பட்டு, அதனை தொடர்ந்து இயேசு பாலன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது.இயேசு பாலன் பிறப்பை தொடர்ந்து தேவாலாயத்தின் மணி ஒலிக்கப்பட்டு வெடி கொழுத்தப்பட்டது.
இயேசு பிறப்பு கொண்டாட்டங்களில் ஆலய வழிபாடு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும், சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத் தொழுவ காட்சிகள், வாழ்த்து அட்டை, மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்மஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்மஸ் பாடல், என்பன தேவாலாயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள படங்கள் நேற்று வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள தேவாலாயத்தில் இரவு 12 மணிக்கு முதல் நடைபெற்ற நிகழ்வின் போது எடுக்கப்பட்டவை.