Search

கிளிநொச்சி மக்களின் அவலம் தொடர்கிறது – கடும் மழை வெள்ளப்பாதிப்புக்கள் இடப்பெயர்வுகள் அதிகரிப்பு

தற்போது கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்பட்டு மக்கள் இடம்பெயந்து பாடசாலைகளிலும் பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 642 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மக்களின் அவலம்  தொடர்கிறது - கடும் மழை வெள்ளப்பாதிப்புக்கள் இடப்பெயர்வுகள் அதிகரிப்பு-

இவர்களுக்கான மருத்துவச் சேவையினை கிளிநொச்சி வைத்தியசாலை உளநல மருத்துவர் வைத்தியர் ஜெயராசா தலைமையில் வைத்தியஅதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (27) மாலை வரைக்கும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் படி மாவட்டத்தில் 563 குடும்பங்களைச் சேர்ந்த 2189 மக்கள் இடம்பெயர்ந்து 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர் அத்தோடு 1732 குடும்பங்களைச் சேர்ந்த 6597 மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.இத்தொகைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பே அதிகமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகபிரிவில்  மூன்று இடைத்தங்கல் முகாம்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 799 மக்களும்,கண்டாவளையில் ஆறு இடைத்தங்கல் முகாம்களில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 891 மக்களும்,பூநகரி பிரதேச செயலக பிரிவில் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 499 மக்களும் கானப்படுகின்றனர்.

இம் மக்களை இன்று பாராளுமன்ற சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர் சுகுனதாஸ், கிராம அலுவலர் ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான உடனடி தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர்.




Leave a Reply

Your email address will not be published.