யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்திலும் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு கரையேராப்பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிற்பகல் அல்லது மாலை நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே விருத்தியடையும் எனவும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் , இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் கடந்த 20 ஆம் திகதி 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological department Srilanka) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.