விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும். அது இலங்கையில் இருந்து பல மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் தரித்து நிற்கும். இதன்போது புலிகள் ஒருவகையான நீர் மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி, பெறுமதிவாய்ந்த ஆயுதங்களை மட்டும், கடலுக்கு அடியால் கொண்டு வந்து முல்லைத்தீவில் சேர்ப்பார்கள். இங்கே படத்தில் காணப்படும், புலிகளின் நீர் மூழ்கிக் கப்பல் ஆயுதங்களை கரைக்கு கொண்டுவர பயன்படுத்தப்படவை என்று, இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இக் கப்பலை இலங்கை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. பல மாதங்களுக்கு முன்னரே இக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் புகைப்படங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல், நடுக்கடலில் தரித்து நிற்க்கும் தாய்க் கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கி பின்னர் அதனை முல்லைத்தீவு கடற்கரைக்கு கொண்டுவர ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடையம் என்னவென்றால், இக் கப்பல் பிற நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகளால் வடிவகைக்கப்பட்டு , பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தான்.