Search

சஞ்ஜீவ பண்டார மீது தாக்குதல்!

இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார இன்று காலை தாக்குதலுக்குள்ளான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது நினைவு தினத்தை அனுஸ்டித்து பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பும் போது இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்ஜீவ பண்டார தாக்குதலுக்குள்ளானதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என சந்தேகிப்பதாக சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *