தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படாமல் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாது நேற்றைய கூட்டத்திலும் மாணவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு புனர்வாழ்வின் பின்னரே விடுதலை என அரசாங்கம் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தமது சக மாணவர்களை விடுவித்தாலே மீண்டும் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமென மாணவர்களும் பல்கலைக்கழக சமுகத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம் பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரச தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக பல பேச்சு வார்த்தைகள் நடாத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தற்போது நிர்வாகத்தின் இறுக்கமான பிடியின் காரணமாக தொடர்நது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதாவது பல்கலைக்கழகத்தின் கலைப்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் விடுவித்த பின்னரே தாம் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்போம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இது தொடர்பில் தைப் பொங்கலுக்குப் பின்னர் பரீசீலிக்கலாம் இப்ப அவசரமில்லை என்றும் திட்டவட்டமாக கூறினர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழ விஞஞான பீட கூட்டம் நடைபெற்றது.
இதிலும் மாணவர்கள் விடுவிப்பின்றி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிபதன் விளைவுகள் தொடர்பாகவே ஆராயப்பட்டது.
அதாவது மாணவர்கள் விடுவிக்கப்படாமல் கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாது .
விடுவித்த பின்னர் தொடர்வதென்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாத நிலை உள்ளது.