Search

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வணிகக் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆசிரியர் நியமனம்

வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.த.ரமேஸ்வரன்  இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு வணிகக் கல்வி, க.பொ.த.(சா.த) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology)  ஆகிய  பாடங்களை    கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். சில மாதங்களாக  ICT பாடத்திற்கு ஆசிரியர் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வருடம் தரம் 10,11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய ஒரு பாடமாக ICT பாடத்தை தயக்கமின்றி கற்று பயனடையலாம்.




Leave a Reply

Your email address will not be published.