தமிழர் தாயப்பிரதேசங்களில் இராணுவ சர்வாதிகாரம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நி லைக்கு பாடசாலைகளில் இராணுவம் கற்பித்தலுக்காக நியமிக்கப்படும் சம்பவம் எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலைகளில் இராணுவத்தினர் சிங்கள மொழி கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த விடயம் தொடர்பில் நாம் தகவலறிந்தவுடன் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது விடயத்தினை மிகுந்த அச்சத்தின் மத்தியில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே இராணுவ அராஜகத்தின் மற்றொரு வடிவமாகவே நாம் இந்தவிடயத்தை நாங்க ள் பார்க்கவேண்டியிருக்கின்றது.
தெற்கில் இரண்டாம் மொழியான தமிழிழை கற்பிப்பதற்கு சுற்றுநிரூபங்கள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுபோன்றே வடக்கிலும் சிங்களம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் 5ம் தரம், 6ம் தரத்துட ன் கல்வியை கைவிட்டவர்களும், பாடசாலைகளிலிருந்து விலகியவர்களும் எங்கள் பாட சாலைகளுக்குள் நுழைந்து கல்வி கற்பிப்பதை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
நான் ஒரு ஆசிரியராக இருந்தவன் என்ற அடிப்படையில் இந்தவிடயத்தை ஆசிரிய சமூகமோ, பெற்றோர்களோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
அதற்கு மேல் தமிழர் தாயத்தில் இராணுவம் தோட்டம் செய்கிறது, கடற்றொழில் செய்கிறது, விழாக்கள் நடத்துகின்றது, நிர்வாக நடவடிக்கைகளுக்குள் புகுந்திருக்கின்றது, இப்போது கல்வியிலும் தங்கள் ஆதிக்கத்தை புகுத்துகின்றார்கள் என்றால் இங்கு நடந்துகொண்டிருப் பது ஒரு இராணுவ ஆதிக்கம் என நாம் குறிப்பிடுவது தவறல்ல.
எனவே இந்தவிடயத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம், கண்டிக்கின்றோம்.
அதனோடு மட்டுமல்லாமல் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் எமத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியிருக்கின்றோம்.
இதனடிப்படையில் இந்தவிடயம் தொடர்பில் நிச்சயமாக தமிழர்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.
மேலும் இந்த நடவடிக்கை அரசாங்கத்தினால் மிக நீண்டகால திட்டத் தினடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றார்.