
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்குமா இல்லையா என்பதனை இப்போதே தெரிவிக்க முடியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை பிரித்தனியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு ஏற்படுத்தப்படாவி;ட்டால் அமர்வுகளை கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதம டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.