2011 ம் ஆண்டை வெற்றியுடன் முடித்த வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் 2012 ம் ஆண்டை அதிரடி வெற்றியுடன் வரவேற்றிருக்கின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 08 .01 .2012 அன்று இடம்பெற்ற போட்டியில் சரே யுனைட்டட் அணியை எதிர்த்து மோதி 14 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டியுள்ளது. முதலாம் சுற்றில் சரே யுனைட்டட் 4 -1 கோல்க்கனக்கில் மட்டுமே புலூசிடம் தோற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக மூன்று வீரர்கள் hat -trick என்று சொல்லப்படும் மூன்று கோல்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் 7 வீரர்கள் கோல்களை போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. புளூஸ் அணி இடைவேளைக்கு முன் 3 கோல்களை அடித்து 3 -0 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் நின்றது. நான்காவது கோலை அடித்தவுடன் சரே யுனைட்டட் அணி ஒரு கோலை போட்டது. அதன்பின் தொடர்ந்து 10 கோல்களை அடித்து புதுவருடத்தை பட்டாசுடன் ஆரம்பித்தது வல்வை புளூஸ். இப்போட்டியில் மயூரன், சாம், சாரு ஆகியோர் தலா மூன்று கோள்களையும், நிரோஷன் இரண்டு கோல்களையும், ரிஷி, நிர்மல், மற்றும் நிவாசர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் போட்டிருந்தனர்.
இவ்வெற்றியை தொடர்ந்து புளூஸ் கழகம் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த வாரம் 15 .01 .2012 அன்று சுபன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதுகின்றது.
செய்திகள்: ஆதவன்