இந்தோனேஷிய கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணம் செய்ய முற்பட்டவர்களே இவ்வாறு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
46 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
சுமத்திரா தீவுகளிலிருந்து 330 கடல் மைல் தொலைவில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்த படகு இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களாக நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷிய அதிகாரிகளின் உதவியை முதலில் நிராகரித்திருந்தனர்.
இந்தோனேஷியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடுப்பகுதி முதல் இதுவரையில் 6500 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
2012ம் ஆண்டு ஆகஸ்;ட் மாதம் முதல் 13ம் திகதி முதல் இதுவரையில் 832 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.