வல்வெட்டித்துறை நகரசபையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த திங்கக்கிழமை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்களினால் கொண்டுவரப்பட்ட போது ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட வல்வை நகரசபையில், வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு சமர்ப்பிற்கப்பட்ட போது தலைவர் அவர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இரு உறுப்பினர்கள் வாக்களிப்பிற்கு சழூகமளிக்கவில்லை, இதனால் இவ் வரவு செலவுத் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
கடந்த டிசம்பர் மாசம் இரு தடவைகள் இவ் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டபோது உறுப்பினர்கள் சமூகமளிக்காத காரணத்தினால் கூட்டம் கைவிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.