Search

புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய அம்பகாமம் காட்டில் பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாயை கரடி கடித்தது:-

மாங்குளம் அம்பகாமம்  பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் முன்னர், நிலை கொண்டிருந்த பெரிய காட்டு பகுதிக்கு போர் பயிற்சியில் ஈடுபட சென்றிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரை கரடி ஒன்று கடித்து காயப்படுத்தியுள்ளது.

5 நாட்கள் போர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக இராணுவ குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் உள்ள இந்த காட்டிக்கு சென்றுள்ளது. இராணுவ அதிகாரி கடித்த கரடி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது.

கோப்ரலின் முகம் மற்றும் வலது கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *