Search

வடதமிழீழத்திற்குள் ஊடுருவும் தென்னிலங்கை சக்திகள்

வட தமிழீழத்தின் கடற்பரப்புக்குள் நாளாந்தம் நானூறுக்கு மேற்பட்ட தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருதால் தங்களின் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்சங்கங்களின் சமாசம் குற்றஞ் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் சிறிது காலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்து. ஆனால் அக்காலப்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மீனவர்கள் அமைச்சர்கள், படைத்தரப்பு, அதிகாரிகள் என பலரிடமும் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

யுத்தத்தால் தங்களுடைய பெறுமதிமிக்க கடற்றொழில் உபகரணங்களை இழந்து பின்னர் மிள்குடியேறி கடன், லீசிங் என பலவேறு சுமைகளுக்கு ஊடாக மீண்டும் தொழிலினை ஆரம்பித்து வருகின்றோம்.

இந்நிலையில் தென்னில்ஙகை மீனவர்களின் வருகையும் தொழில் நடவடிக்கைகளும் தங்களின் தொழிலினை பெருமளவுக்கு பாதித்துள்ளதாக குறித்த அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

தென்னில்ங்கை மீனவர்கள் தடை செய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் தங்கள் பிரதேச கடல் வளங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு தங்களுடைய கடற்றொழில் உபகரணங்களும் சேதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

படையினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு கடலுக்குள் நுழைவதனால் தங்களால் பல அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரைக்கும் பயன் கிடைக்கவில்லை குறிப்பிடுகின்றனர்.

அதுமட்டுமன்றி இந்திய மீனவர்களின் வருகையும் அவர்களின் இயந்திர படகின் நடவடிக்கையும் முல்லைத்தீவு மீனவர்களை மேலும் பாதித்து வருவதாக சமாசம் குற்றம் சாட்டியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *