Search

சர்க்கரையும் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பும்

நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி.
நாம் தேடித் தேடி சாப்பிடுகிற சைனீஸ் உணவுகள், நூடுல்ஸ், பிஸ்கட்… இப்படிப் பலதிலும் பிரதானம் சர்க்கரை. OSE என முடிகிற எந்த உணவிலும்  சர்க்கரை இருப்பதாக அர்த்தம்.

ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்  போது, கூடுதலாக வேறு எதற்கு?’’ என்பவர், ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்கிறார். ஒரு  டீஸ்பூன் என்பது 5 கிராமுக்கு சமம்.

கடினமான உடலுழைப்பு உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் 3 முதல் 5 டீஸ்பூன் வரை அனுமதி. அது சரி… பிறகு சர்க்கரைக்கு என்னதான் மாற்று  என்கிறீர்களா? அதற்கும் வழி சொல்கிறார் ஷைனி. ‘‘சுத்திகரிக்கப்படாத (ஹிஸீக்ஷீமீயீவீஸீமீபீ) சர்க்கரை கிடைக்கிறது. பார்வைக்கு சற்றே பழுப்பு  நிறத்தில் இருக்கும் அதுதான் ஆரோக்கியமானது. பழுப்பு நிறத்தில் இருக்கும் எதையும் நாம் விரும்புவதில்லையே…

பழுப்பு சர்க்கரையை சலவை செய்த மாதிரி வெள்ளைவெளேர் என மாற்ற சல்ஃபைட் என்கிற ரசாயனத்தால் பதப்படுத்திய பிறகுதான், விற்பனைக்கு  வருகிறது. முன்பெல்லாம் சர்க்கரை, சுலபத்தில் கட்டிதட்டும். இப்போது, மணல் மாதிரி அப்படியே கொட்டுகிறது. காரணம், அதிலுள்ள ‘ஆன்ட்டி  கேக்கிங் ஏஜென்ட்’. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனைவெல்லம் பெட்டர். தேனிலும் கலப்படத்துக்குக் குறைவில்லை என்பதால்,  தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். அதற்காக சர்க்கரைதான் ஆபத்து என  தேனையும், கருப்பட்டியையும் அளவுக்கதிகமாக எடுத்துக்  கொள்வதும் சரியல்ல. அளவு மீறப்படாத வரை எதுவுமே ஆபத்தைத் தருவதில்லை.’’ ஒரு நாளைக்கு 2 அல்லது 3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு  மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் மிகச் சிறந்த, நிரூபிக்கப்பட்ட வழிகள்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *