கூகுளின் இயங்குதளமான Android 4.1 Jelly Bean இல் செயற்படக்கூடிய Smart TV இனை உருவாக்கியுள்ள Archos நிறுவனம் அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது.
1.5 GHz Multi-Core TI OMAP 4470 Processor, 1GB RAM, மற்றும் 8GB சேமிப்பு சாதனம் ஆகியவற்றினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது Ethernet port, Mini HDMI output, Micro USB port, Micro SD slot, HD webcam என்பனவற்றினையும் LED சமிக்ஞை விள்குகளையும் கொண்டுள்ளன.
இத்தொலைக்காட்சியின் ஊடாக கூகுளின் Play Store போன்றவற்றினை பயன்படுத்தக்கூடியதான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியின் பெறுமதியானது 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.