நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஜப்பான் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன என்று இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளன என்று கடற்படையினர் குறிப்பிட்டனர். சுனாமி மற்றும் கிரிசேமி ஆகிய இரண்டு கப்பல்களுமே கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளன.