லண்டன் மிச்சம் பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் ஈழத்து பெண் பலி –

இன்londonறு காலை நடந்த கொடூர பஸ் விபத்தில் விபத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று நடந்த இந்த சம்பத்தில் 30 வயது மதிக்கத்தக்க சுகந்தி என்ற ஈழத்துப் பெண் அதே இடத்தில் பலியானார் . அவர் மூன்று பிள்ளைகளின் தாயார் , வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பலியாகியுள்ளார்.

பாதசாரி ஒருவர் இதனைக் கண்டதாகவும் நடுத்தர வயது மிக்க  பெண்  ஒருவர் பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அப் பெண் அவ் இடத்தி பலியானதை பொலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜேர்மன் நாட்டில் இருந்து லண்டன் வந்து தனது கணவர் பிள்ளைகளோடு அவர் வாழ்ந்து வந்துள்ளார். மிச்சத்தில் உள்ள டட்லியா என்னும் சூப்பர் மார்கெட்டில் இவர் வேலை செய்து வந்துள்ளார். சுகந்தி அக்கா என்று அனைவராலும் அறியப்படும் இவர் மிகவும் நல்லவர் என்றும். அருமையான நபர் என்றும் பலர் தெரிவித்துள்ளார்கள்.

இன்று காலை லண்டன் முழுவதும் , பெரும் பனிப் புகார் காணப்பட்டது. சுகந்தி நடைபாதையில் வீதியைக் கடக்க முற்பட்டவேளை அங்கே வேகமாக வந்த பஸ் அவர் மீது மோதியுள்ளது. இதற்கு பனிப் புகாரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.