பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் டேவிட் கமரூன் பங்கேற்கக் கூடாது – மெக்டொனாவ்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்கக் கூடாத என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிப்போயின் மெக்டொனாவ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கமரூன் அரசாங்கம் அங்கீகரிப்பதாக பொருள்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் கனிசமானளவு தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல்கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடாபில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கடமைகள் தொடர்பில் நாளைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் ஒன்றரை மணித்தியாலம் இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இதற்கு மேலதிமாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஒரு மணித்தியாலம் விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.