பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு, வல்வை நலன்புரிச் சங்கத்தின் யாப்பு எமது அறிவித்தலின் படி 05.01.13 வரையிலான திகதியில் ஏதேனும் மாற்றமோ, அல்லது இணைக்கவோ தேவை இருந்தால் 05.01.13 முன்னதாக எமது இணைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் படி அறிவித்திருந்தோம். எமக்குக் கிடைக்கப் பெற்ற ஆலோசனைகளுக்கு அமைய சில மாற்றங்களுடன் எமது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் (13.01.2013 ) கொண்டுவரப்படும் யாப்பின் புதிய பிரதி உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து வல்வை மக்களையும் தவறாது வரும் 13.01.13 ஞாயிற்றுக்கிழமை 6.00 மணிக்கு North East Mitcham Community Association , Woodlands way , Mitcham , Surrey , CR4 2DZ என்னும் முகவரிக்கு சமூகம் தந்து புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்
வல்வை நலன்புரிச் சங்கம் ( ஐ.இ )