மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரம், மற்றும் மாகாண சபைகளின் உரிமைகளைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலம், பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் நேற்று( செவ்வாய்கிழமை) சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன. இருப்பினும் 107 வாக்குகளால் இச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிவருங்காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பாடு திண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.