Search

வல்வெட்டித்துறையில் NELSIP திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி அமைக்க ஏற்பாடு

வல்வெட்டித்துறையில் NELSIP  (North East Local Services Improvement Project – வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்)  திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்று வல்வை நகரசபையினால் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியானது தற்பொழுது இயங்கும் சந்தைக்கு சற்று அருகாமையில் அமையவுள்ளது.

குறிப்பிடப்பட்ட சந்தைக் கட்டிடத் தொகுதிக்குரிய  ஆரம்ப வரைபடம் 1990 களில் வரையப்பட்டுள்ளது.  இதன் பிரகாரம், இச் சந்தைக் கட்டடத் தொகுதியானது, காய் கறி வியாபாரத்திற்கு ஏற்ற வகையிலும், மற்றும் சில பொது வியாபாரங்களுக்கு ஏற்ற வகையிலும், பொது மல சல கூட வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது, ஆரம்பக் கட்ட வரைபடத்தில் சில மாற்றங்களைக் கொணர்ந்து (?), மேற்படித் திட்டம் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டத்தின் (NELSIP) கீழ் வல்வை நகரசபையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.



Leave a Reply

Your email address will not be published.