குர்து போராளிகளின் படுகொலையின் பின்னணியில் ஈரானிய உளவுத்துறை?

குர்து போராளிகளின் படுகொலையின் பின்னணியில் ஈரானிய உளவுத்துறை?

பிரான்சில் மூன்று மூத்த குர்து பெண் போராளிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஈரானிய உளவுத்துறையினர் இருப்பதாக குர்து கல்விமான்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சங்கதி-24 இணையத்தின் ஆசிரியர் பீடத்திடம் கருத்துரைத்திருக்கும் குர்து விரிவுரையாளர் ஒருவர், சிரியாவில் இடம்பெற்று வரும் அதிபர் அசாத்திற்கு எதிரான புரட்சிக்கு துருக்கிய அரசு துணைபோகும் நிலையில் துருக்கிய அரசாங்கத்திற்கும், குர்து போராளிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்து துருக்கியில் பதற்ற நிலையை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் இக்கைங்கரியத்தை ஈரானிய உளவுப் பிரிவினர் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழப்புவதில் துருக்கிய இராணுவ உயர்பீடத்தை சேர்ந்த சிலர் முனைப்புக் காட்டி வருவதாகவும், இந்நிலையில் மூன்று பெண் போராளிகளின் படுகொலையை நிகழ்த்துவதற்கு ஈரானிய உளவுப் பிரிவினரின் உதவியை துருக்கிய இராணுவ உயர்பீடத்தைச் சேர்ந்த சிலர் பெற்றிருக்கக்கூடும் என்றும் சம்பந்தப்பட்ட குர்து விரிவுரையாளர் சங்கதி-24 இணையத்தின் ஆசிரியர் பீடத்திடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்குப் பின்னர் உருது-பாரசீக பின்னணியைக் கொண்ட சிலர் பிரான்சில் உள்ள தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களை பின்தொடர்வது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் குர்து பெண் போராளிகளின் படுகொலையில் சிங்கள அரசுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் ஈரானிய (பாரசீக) உளவுத்துறையின் அரூபகரம் தொடர்பான சந்தேகங்கள் தற்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.