போலந்தில் நிறுவனமொன்று விளம்பரத்திற்காக ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் கார்ட்டூன் படத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தில் உள்ள “போல்ஸ்கா பெலிபோனியா சைப்ரோவா” என்ற கைபேசி நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய விளம்பரத்தை தயாரித்துள்ளது.
இதில் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் கார்ட்டூனை பயன்படுத்தி, தொலைக்காட்சியிலும், போஸ்டர் மூலமும் விளம்பரப்படுத்தியுள்ளது.
இதற்கு போலந்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், லுகாஸ் காமின்ஸ்கி என்பவர் குறித்த நிறுவனத்திற்கு வெளிப்படையாக எழுதியுள்ள கடிதத்தில், இந்த 20ம் நூண்றாண்டின் மிகப் பெரிய குற்றவாளிகளில் லெனினும் ஒருவர்.
இந்த விளம்பரம் இளைஞர்களை நேரடியாக சென்று சேருவதால், லெனின் மேல் அவர்களுக்கு வேறு விதமான அபிப்ராயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இவர் கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் நடைபெற்ற குற்ற செயல்களை புலனாய்வு செய்யும் தேசிய அமைப்பின் இயக்குனர் ஆவார்.
அதே போன்று லெனின் கார்ட்டூனுக்கு எதிராக கைபேசி நிறுவனத்திற்கு, 1,000க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதையடுத்து லெனினின் கார்ட்டூனை நீக்க சம்பந்தப்பட்ட கைபேசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.