ஆஞ்சநேயர் முகத்தையொத்த வண்ணாத்திப்பூச்சி

ஹட்டன், செனன் தோட்டத்திலுள்ள வீடொன்றின் கூரையில் ஆஞ்சநேயர் முகத்தையொத்த வண்ணத்திப்பூச்சியொன்று நேற்று சனிக்கிழமை காணப்பட்டது.

இத்தோட்டத்திலுள்ள மருதமுத்து சுப்பையா என்பவரின் வீட்டுக் கூரையிலேயே ஆஞ்சநேயர் முகத்தையொத்த இவ்வண்ணத்திப்பூச்சி காணப்பட்டது.

வீட்டுக் கூரையில் வித்தியாசமான பூச்சியொன்று காணப்படுவதைக் கண்ட அவ்வீட்டு உரிமையாளர், இது தொடர்பில் ஊர் குருக்களுக்கு தெரியப்படுத்தினார். அவர்  ஆஞ்சநேயர் முகத்தையொத்த இவ்வண்ணத்திப்பூச்சியை வீட்டிலுள்ள சுவாமி படங்களின் முன்வைத்தார்.

இவ்வண்ணத்திப்பூச்சியின் தலையில் ஆஞ்சநேயரின் முகம் மிகத் தெளிவாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வண்ணத்திப்பூச்சியை அதிகளவான மக்கள் பார்வையிட்டுவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.