புதிய வேகத்தில்,அதிக எண்ணிக்கையுடன் எம் இணையம்

இன்று எமது இணையம் அடைந்துவரும் முன்னேற்றமும்,அதனூடாக அதனை தினமும் பார்வையிடும் வாசகர்களின் எண்ணிக்கையும் மிகவும் சந்தோசமளிக்கின்றது.இதற்காக வேலை செய்பவர்களை பெருமையுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.பாராட்டுகள்.வாழ்த்துக்கள்.!!
இணையத்தினை ஆரம்பித்தவன் என்றமுறையிலும்,அதன் பொறுப்பாசிரியன் என்ற முறையிலும்
ஒரு வாசகன் என்ற முறையிலும் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைத்த,இன்றும்
உழைத்துவரும் அனைவரையும் தலைவணங்கி பாராட்டுகின்றேன்.
மிகவும் அற்புதமான வேலைசெய்து வருகின்றீர்கள்.தொடரட்டும்…
வெறுமனே செய்திகளையும்,கட்டுரைகளையும் இணையத்தில் பதிவேற்றிவிட்டு சும்மா இருந்துவிடாமல் முகநூலிலும்,ரிவிற்றர் போன்றவற்றில் மீண்டும் மீண்டும் அவற்றை வெளியிட்டு
அதிகமானவர்கள் பார்வையிடச்செய்துள்ளார்கள் இந்த இணையத்தில் பணிசெய்பவர்கள்.முழு
ஈடுபாட்டுடன் அவர்கள் செய்தவற்றின் அறுவடையாகவே இன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் வந்து பார்க்கும் ஒரு தளமாக உருவாகியுள்ளது.
இந்த இணையம் ஆரம்பிக்கப்பட்டபொழுதில் இது என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ
அதுவே இந்த இணையத்தின் நோக்கமாக எம்மைப்பற்றி(இணையத்தின் வலதுமேல் மூலையில்) பகுதியில் பதியப்பட்டுள்ளது.இந்த இணையம் அந்த நோக்கத்தின் பாதையில் இருந்து விலகாமல்,சறுகாமல் தொடர்ந்து பயணப்பட இந்த இணையத்துக்காக வாசகர்கள் நல்கும் ஆதரவும் ஒரு முக்கியகாரணம். இந்த இணையம் என்றென்றும் அந்த நோக்கத்துடனேயே தொடர்ந்தும் பயணப்படும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என்றே நம்புகின்றேன்.
முழுக்க முழுக்க இந்த இணையத்தின் நோக்கம் பற்றிய புரிந்துகொள்ளுதலுடன் இதில் இணைந்து வேலைசெய்பவர்களின் உழைப்பு,இந்த இணையத்தினை தினமும் விடிந்ததும் தமது
முதல் பார்வையாக பார்க்கும் வாசகர்களின் தேர்வு என்பன இணைந்துதான் இந்த
இணையத்தை வளர்த்துள்ளது.
மேலும் இந்த இணையத்தினை புதுமெருகேற்றி தினமும் புதியபுதிய விடயங்களை பதிவேற்றி ஒருபுதியவடிவத்தில் தந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதியவர்களையும் எம்முடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த இணையம் எப்போதும் விமர்சனங்களையும்,கருத்துகளையும் ஆரோக்கியமானமுறையில்
உள்வாங்கி பரிசீலிக்கும் என்பதையும்  தெரிவித்துகொள்கின்றேன்.
அனைவரது கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்.
அனைவரும் இணைந்து செயலாற்றவும் அழைக்கின்றோம்.

————————.
ச.ச.முத்து

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *