கடந்த மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் சதுக்கத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தது.
இது தொடர்பாக கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றிருந்த சிறீலங்கா ராணுவ புலனாய்வு பிரிவினர் வீட்டில் இருந்த அனைவரையும் கைது செய்து விசாரணைக்காக என்று கூட்டிச்சென்றுள்ளதாக அறியப்படுகிறது.