சிங்கள பயங்கரவாத அரசினால் யாழ் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அநாமதேய எச்சரிக்கைக் கடிதங்கள்

சிங்கள பயங்கரவாத அரசினால் யாழ் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அநாமதேய எச்சரிக்கைக் கடிதங்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் (சிங்கள பயங்கரவாத அரசு) தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சுறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைத்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள பயங்கரவாத அரசினால் திட்டமிட்டு இச் சதிச்செயல் தொடர்ந்தும் நடக்கின்றது. மாணவர்களை மிரட்ட சில கொலைகளையும் சிங்கள பயங்கரவாத அரசு திட்டமிட்டு நடாத்தக் கூடும் என மாணவர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.