ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து ஒபாமா கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து அவர்கள் பெருமளவில் விரட்டப்பட்டுள்ளனர். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானை ஒரு புகழிடமாக அல்கொய்தா தீவிராவதிகள் பயன்படுத்த முடியாத அளவு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுடன் ஆன 11 ஆண்டு கால போர் முடிவுக்கு வருகிறது.
திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2014) அங்கிருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகின்றன. எனவே ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு முழுவதையும் அந்நாட்டு ராணுவம் ஏற்க உள்ளது. அதன் பின்னர் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
ஆப்கானிஸ்தானுடன் ஆன போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் 66 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை படிப்படியாக திரும்ப அழைக்க ஓபாமா திட்டமிட்டுள்ளார் அதற்கான உத்தரவை பென்டகனுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை பிறப்பித்துள்ளது.