இராணுவத்தை விட்டு கடந்த ஆண்டில் 71ஆயிரத்து 458 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே 71ஆயிரத்து 458 பேராகும்.
இவர்களில் 33ஆயிரத்து 532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளபடையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.