வீரத்தளபதி கிட்டண்ணா
தம்பிக்கு தம்பியாய் இருந்த தளபதியே கிட்டண்ணாவே
தலைவனின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த செயல் வீரனே
உருவத்தில் செயல் வீரானாய் இருந்த கிட்டண்ணாவே
கருமத்தில் பெரிய வீரானாய் விளங்கிய கிட்டண்ணாவே
சிறியவர்களுக்கு கிட்டு மாமாவாகவும்
பெரியவர்களுக்கு கிட்டண்ணாவாகவும் விளங்கிய அன்புத் தளபதியே….
போராளிகளுக்கு போர் ஆசானாய் விளங்கிய
போர்த்தளபதியே கிட்டண்ணாவே
இராணுவத்தை கதிகலங்க வைத்த
களமுனை தளபதியே கிட்டண்ணாவே
இராணுவத்தை முகாமுக்குள் முடக்கிய
முதன்மை தளபதியே கிட்டண்ணாவே
இலங்கை இராணுவ தளபதியுடன் கை குலுக்கிய
ஈழ இராணுவ தளபதியே கிட்டண்ணாவே….
சிறையினை சிந்தனைக்களமாக்கிய சிந்தனையாளனே
சிறந்த ஓவியனாகிய ஓவியன் கிட்டண்ணாவே
அனைத்துலக கிளைகளை அரசியல் மயப்படுத்திய
அரசியல் தளபதி கிட்டண்ணாவே…
புலம்பெயர் தமிழரை விழிப்புற வைத்த தளபதி கிட்டண்ணாவே
காந்தி தேசத்து நயவஞ்சகத்தில் ஏன் சிக்கினாயோ?
தமிழ் மக்களின் நட்பு நாயகனே கிட்டண்ணாவே
காந்தி தேசத்துக்கு மீண்டும் புலிகளின் கொள்கையை
உறுதியுடன் எடுத்துரைத்த புலித்தளபதியே கிட்டண்ணாவே
காந்தி தேசக் கடலின் மடியில்
தீயுடன் சங்கமித்த எங்கள் வீரத்தளபதி கிட்டண்ணாவே
உங்களுக்கு என்றென்றும் எங்கள் வீரவணக்கம்.
வல்வையூர் குட்டி